வீட்டிற்குள் நுழைந்த நாகப்பாம்பை தீயணைப்புதுறையினர் பத்திரமாக பிடித்தனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் உள்ள வேடசந்தூர் பாத்திமா நகரில் வின்சென்ட் என்பவர் வசித்துவருகிறார். இவரது வீட்டிற்குள் நேற்று பாம்பு ஒன்று நுழைந்துவிட்டது. இதனை பார்த்த குடும்பத்தினர் அலறி அடித்துக்கொண்டு வீட்டை விட்டு வெளியே ஓடி வந்தனர். இதுகுறித்து உடனடியாக தீயணைப்பு துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அந்த தகவலின் பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற தீயணைப்பு வீரர்கள் சுமார் 2 மணி நேர போராட்டத்திற்கு பிறகு வீட்டிற்குள் பதுங்கி இருந்த 5 அடி நீளமுடைய நாகப்பாம்பை பத்திரமாக பிடித்தனர். அதன்பிறகு பாம்பு வனப்பகுதியில் விடப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.