விதிமுறைகளை மீறி அதிகளவு மாணவர்களை ஏற்றி சென்ற 7 ஆட்டோக்களை அதிகாரிகள் பறிமுதல் செய்துள்ளனர்.
திண்டுக்கல் மாவட்டத்தில் அரசு மற்றும் தனியார் பள்ளிகள் என மொத்தம் 105 பள்ளிகள் இருக்கின்றன. இந்த பள்ளிகளுக்கு பெரும்பாலும் மாணவர்கள் ஆட்டோ மற்றும் வேனில் செய்கின்றனர். இந்நிலையில் ஒருசில ஆட்டோக்களில் விதிமுறைகளை மீறி அதிகளவில் மாணவ-மாணவிகளை ஏற்றி செல்கின்றனர்.
எனவே வட்டார போக்குவரத்து அலுவலர் சுரேஷ் தலைமையில் திண்டுக்கல்லில் அதிகாரிகள் திடீர் வாகன சோதனையில் ஈடுபட்டு விதிமுறைகளை மீறி அதிகமான மாணவர்களை ஏற்றி சென்ற 7 ஆட்டோக்களை பறிமுதல் செய்துள்ளனர். மேலும் அளவுக்கு அதிகமான மாணவர்களை ஏற்றி செல்லக்கூடாது என்று அதிகாரிகள் பிற ஆட்டோ ஓட்டுநர்களை எச்சரித்து அனுப்பியுள்ளனர்.