உக்ரேனின் கீவ் நகரில் இருந்து ரஷ்ய படைகள் வெளியேறிய பின்னரும் கீவ் நகரில் சாலைகளில் ரஷ்ய கண்ணி வெடிகளை புதைத்து விட்டுச் சென்றுள்ளன. இதனால் கீவ் நகரம் பாதுகாப்பானதாக இல்லை என ஜனாதிபதி ஜெலென்ஸ்கி தெரிவித்துள்ளார். அப்பாவி மக்களை கொன்று புதைத்து கீவ் நகரம் சுடுகாடு போல் காட்சி அளிப்பதாகவும் அவர் கூறியுள்ளார்.
கீவ் நகரத்திலிருந்து ரஷ்யப் படைகள் வெளியேறிய பின்னரும் கிழக்கு உக்ரைனில் ரஷ்ய படைகள் தங்களுடைய பலத்தை அதிகரித்து வருவதாக ஆதாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது. அதோடு ரஷ்ய படைகள் வெளியேறிவிட்டன என நிம்மதி கொள்ள முடியாது எனவும், அவர்கள் ஏவுகணை தாக்குதல் மற்றும் தொலைவிலிருந்து தாக்குதல் நடத்த வாய்ப்பு உள்ளதாகவும் கூறியுள்ளார். அதோடு உக்ரைனின் கிழக்குப் பகுதி எப்போது வேண்டுமானாலும் பயங்கரமாக மாறலாம் எனவும் எச்சரிக்கை விடுத்துள்ளார்.