Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் பெரியார் சமத்துவபுரங்கள்….. சீரமைப்பதற்கான வழிமுறைகள்…. வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!

பெரியார் சமத்துவ புரங்களை சீரமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து அரசு வெளியிட்டுள்ளது.

தமிழகத்தில் கடந்த 1997-ம் ஆண்டு ஆதிதிராவிட மக்கள் அனைவரும் ஒற்றுமையாக ஒரே இடத்தில் வாழ வேண்டும் என்ற எண்ணத்தோடு தலா 100 வீடுகள் கட்டிக் கொடுக்கப்பட்டது. இதற்கு பெரியார் சமத்துவபுரம் எனப் பெயரிடப்பட்டது. இந்த திட்டம் மதுரை மாவட்டத்திலுள்ள மேலக்கோட்டை பகுதியில் முதன் முதலில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த சமத்துவபுரம் மொத்தம் 238 இடங்களில் அமைந்துள்ளது. தமிழக முதல்வர் ஸ்டாலின் அவர்கள் புதிதாக பெரியார் சமத்துவபுரங்கள் கட்டித் தரப்படும் எனவும், பராமரிக்கப்படாத சமத்துவபுரங்கள் சீரமைக்கப்படும் எனவும் சட்டமன்றத்தில் கூறியிருந்தார்.

தற்போது இதை  சீரமைப்பதற்கான வழிமுறைகள் குறித்து அரசு அறிவிப்பு வெளியிட்டுள்ளது. அதாவது பெரியார் சிலை பராமரிப்பு, நூலகம், சாலை வசதி, தெரு விளக்கு வசதி போன்ற பணிகளை மேற்கொள்ள இருக்கிறது. இதற்காக ரூபாய் 50 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் கடந்த 10 வருடங்களில் சமத்துவபுரங்களில் உள்கட்டமைப்பு பணிகள் நடைபெறாமல் இருக்கிறது. மேலும் 4 சமத்துவபுரங்கள் கட்டப்பட்டும் ஒப்படைக்கப்படாமல் இருக்கிறது.

Categories

Tech |