லாரி டயர் வெடித்ததால் மலைப்பாதையில் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.
ஈரோடு மாவட்டத்திலுள்ள திம்பம் மலைப்பாதை 27 கொண்டை ஊசி வளைவுகளை கொண்டதாகும். இங்கு தினமும் ஏராளமான வாகனங்கள் வந்து செல்கின்றன. இந்நிலையில் கரூரிலிருந்து கர்நாடக மாநிலம் நோக்கி சிமெண்ட் பாரம் ஏற்றி சென்ற லாரி திம்பம் மலைப்பாதையில் 11-வது கொண்டை ஊசி வளைவு அருகே சென்று கொண்டிருந்த போது திடீரென டயர் வெடித்தது.
இதனால் சாலையின் இருபுறங்களிலும் வாகனங்கள் அணிவகுத்து நின்றது. இதனை அடுத்து இரவு 8 மணி அளவில் மாற்று டயர் பொருத்திய பிறகு லாரி அங்கிருந்து புறப்பட்டு சென்றது. இதனால் சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளது.