நண்பரை தாக்கி கொலை செய்த நபரை காவல் துறையினர் கைது செய்துள்ளனர்.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள சன்னாபுரம் கிராமத்தில் கணேசன் என்பவர் வசித்து வந்துள்ள்ளார் . இவர் தனது நண்பரான ராஜேந்திரன் என்பவருடைய மகள் திருமணத்திற்கு திருவிடைமருதூரில் அமைந்துள்ள பாத்திரக் கடை உரிமையாளரிடம் 1 1/2 ஆண்டுகளுக்கு முன்பு 80 ஆயிரம் மதிப்பிலான பாத்திரங்களை கடனாக வாங்கி கொடுத்துள்ளார். இந்நிலையில் ராஜேந்திரன் வாங்கிய பாத்திரத்திற்காக 60 ஆயிரம் ரூபாய் பணத்தை செலுத்தியுள்ளார். மேலும் மீதமுள்ள 20 ஆயிரம் ரூபாயை செலுத்துமாறு கணேசன் ராஜேந்திரனிடம் கூறியுள்ளார்.
இதனால் ஆத்திரமடைந்த ராஜேந்திரன் கணேசனை தகாத வார்த்தை பேசி சரமாரியாக தாக்கியுள்ளார். இதில் படுகாயம் அடைந்த கணேசனை அருகில் இருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்றனர். ஆனால் அங்கு கணேசனை பரிசோதித்த மருத்துவர் அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக தெரிவித்துள்ளார். இதுகுறித்து கணேசனின் சகோதரர் அன்பழகன் காவல்நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் ராஜேந்திரனை கைது செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்