திருவள்ளூரில் திடீர் முடிவாக பெண் ஒருவர் தூக்கில் தொங்க, அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் குறித்து அதிகாரிகள் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருவள்ளூர் மாவட்டம் பள்ளிப்பட்டு பகுதியை அடுத்த ஆர்கே பேட்டை கொண்டாபுரம் கிராமத்தைச் சேர்ந்தவர் சர்தார். இவர் எலக்ட்ரீசியன் தொழில் செய்து வருகிறார். இவரது மனைவி மகிமா இவர்கள் இருவருக்கும் இரண்டு மகள்கள் ஒரு மகன் உள்ளனர். மூன்று குழந்தைகளும் பள்ளிப் படிப்பை படித்து வருகின்றனர்.
இந்நிலையில் நேற்றைய தினம் எலக்ட்ரீசியன் வேலையை முடித்து விட்டு மதிய உணவு அருந்த வீட்டிற்கு கணவன் வந்த சமயத்தில் மகிமா தூக்கில் பிணமாக தொங்கிக் கொண்டிருந்தார். இதையடுத்து காவல் துறையினருக்கு தகவல் அளிக்கப்பட சம்பவ இடத்திற்கு விரைந்த அவர்கள் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
பின் வீட்டில் மகிமா கடிதம் எழுதி வைத்துள்ளாரா என்று சோதனை மேற்கொள்ள எந்த ஒரு தடயமும் கிடைக்காததால் அவர் தற்கொலை செய்ததற்கான காரணம் தெரியவில்லை. இதையடுத்து கணவன் மனைவி இடையே தகராறு ஏதேனும் ஏற்பட்டுள்ளதா ? அதன் காரணமாக தற்கொலை செய்து கொண்டுள்ளாரா என்பது குறித்து காவல்துறையினர் விரிவான விசாரணையை மேற்கொண்டு வருகின்றனர்.