Categories
தஞ்சாவூர் மாவட்ட செய்திகள்

பரபரப்பு!!…. சிறையில் மகனுக்கு நடந்த கொடுமை…. உறவினர்கள் போராட்டம்…. அதிகாரிகள் பேச்சுவார்த்தை….!!

காவல்துறையினர் தாக்கி வாலிபர் உயிரிழந்ததாக கூறி உறவினர்கள் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள திருவலஞ்சுழி மணப்படையூர் கிராமத்தில் கூலி தொழிலாளியான சோமு என்பவர் வசித்து வருகிறார். இவருக்கு ஹரிஹரன் என்ற மகன் இருந்துள்ளார். இந்நிலையில் ஹரிகரனுக்கும் சாலை போடும் ஒப்பந்தகாரர்களுக்கும் இடையே ஏற்பட்ட தகராறில் கைதுசெய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இதனையடுத்து இரண்டு மாதங்களுக்கு பின் வீடு திரும்பிய கருணாகரனுக்கு திடீரென உடல்நிலை குறைவு ஏற்பட்டுள்ளது. இதனால்  குடும்பத்தினர் ஹரிஹரனை  மீட்டு சிகிச்சைக்காக சென்னை ராஜீவ்காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர்.

ஆனால் அங்கு அளிக்கப்பட்ட சிகிச்சை பலனின்றி ஹரிஹரன் நேற்று முன்தினம் பரிதாபமாக உயிரிழந்துவிட்டார். இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த ஹரிஹரனின் உறவினர்கள் போலீசார் தாக்கியதில் ஹரிஹரனுக்கு உள் காயம் ஏற்பட்டு உயிரிழந்ததாக கூறி போராட்டத்தில் ஈடுபட்டனர். இதுகுறித்து தகவலறிந்த உதவி ஆட்சியர் லதா, துணை போலீஸ் சூப்பிரண்டு வெற்றிச்செல்வன், பூரணி, பயிற்சி துணை போலீஸ் சூப்பிரண்டு பிருந்தா உள்ளிட்டோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்ட ஹரிஹரனின் உறவினர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அதில் உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை தொடர்ந்து ஹரிஹரனின் உறவினர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |