ரயிலில் அடிபட்டு பெண் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஆரயபுரம் பகுதியில் சின்னப்பொண்ணு என்பவர் வசித்து வந்துள்ளார். இவர் வங்காரம் பேட்டை பகுதியில் அமைந்துள்ள ரயில் தண்டவாளத்தை கடக்க முயன்றுள்ளார். அப்போது திருச்சியில் இருந்து மயிலாடுதுறை நோக்கி வந்து கொண்டிருந்த ரயில் சின்னபொண்ணுவின் மீது மோதி தூக்கி வீசப்பட்டார். இந்த விபத்தில் படுகாயமடைந்து சின்னபொண்ணு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்து விட்டார்.
இதுகுறித்து தகவலறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சின்னபொண்ணுவின் சடலத்தை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர்.மேலும் இதுகுறித்து சின்னபொண்ணுவின் மகன் ராஜேந்திரன் காவல் நிலையத்தில் புகார் அளித்துள்ளார். அந்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.