Categories
உலக செய்திகள்

ஆழம் தெரியாம காலை விட்ட ரஷ்யா…. ஆயுதங்கள் இன்றி தவிப்பு…. லீக்கான தகவல்…..!!!!!

உக்ரை நாட்டிற்கும் நுழைந்த ரஷ்யா, உக்ரைனிடம் இதுவரையிலும் 142 விமானங்கள், 131 ஹெலிகொப்டர்கள் மற்றும் 625 tankகளை இழந்துள்ளது. தற்போது ரஷ்யாவுக்கு ஏற்பட்டுள்ள அடுத்த பிரச்சினை என்னவெனில் அதனிடம் ஆயுதங்கள் காலியாகி வருகிறது. இதில் ரஷ்யாவின் சில ஹெலிகொப்டர்கள், ஜெட் விமானங்கள் மற்றும் ஏவுகணைகள் உக்ரைனால் தயாரிக்கப்பட்டவை (அல்லது) உக்ரைனில் தயாரிக்கப்பட்ட உதிரி பாகங்களால் உருவாக்கப்பட்டவை ஆகும். இத்தகவலை பிரித்தானிய பாதுகாப்புத்துறையைச் சேர்ந்த ஒருவர் நேற்றிரவு வெளியிட்டுள்ளார்.

ரஷ்யா பயன்படுத்தும் ஆயுதங்களின் பெரும் அளவிலான பாகங்கள் உக்ரைனால் தயாரிக்கப்பட்டவை என்று தெரிவித்துள்ள அவர் ரஷ்யாவால் அதை தயாரிக்கவோ இறக்குமதி செய்யவோ முடியாது என்று தெரிவித்துள்ளார். இப்போது மற்றநாடுகள் பல ரஷ்யா மீது தடைகள் விதித்து இருப்பதால, ரஷ்யாவால் ஆயுதங்களையோ, ஆயுதங்களின் உதிரி பாகங்களையோ இறக்குமதி செய்ய முடியாத ஒரு சில சூழல் ஏற்பட்டுள்ளது. எனவே ஆழம் தெரியாமல் உக்ரைனில் காலை பதித்த ரஷ்யா தற்போது விழி பிதுங்கிப் போய் நிற்கிறது.

சோவியத் யூனியனாக இருந்த போது நாட்டின் ஆயுதங்கள் மற்றும் இராணுவத்தளவாடங்களில் 30% உக்ரைன்தான் தயாரித்து வந்தது. மேலும் சோவியத் யூனியன் உடைந்த பின்னரும் ரஷ்யாவு மற்றும் உக்ரைனுக்கு இடையில் ஆயுத விற்பனை தொடர்ந்தாலும், 2014-ல் ரஷ்யா கிரிமியாவை ஊடுருவியதைத் அடுத்து ரஷ்யாவுக்கு ஆயுத விற்பனையை உக்ரைன் பெருமளவில் குறைத்துவிட்டது. ஆகையால் உக்ரைனுடன் தேவையின்றி முட்டிக்கொண்டதால் தற்போது ஆயுதங்கள் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதோடு, பழுதான ஆயுதங்களை சரி செய்யவும் உதிரி பாகங்கள் இன்றி ரஷ்யா திகைத்துப் போயிருப்பதகாவும், மீண்டும் ஆயுதங்களையும் படைவீரர்களையும் திரட்டுவதற்காகவே உக்ரைனில் இருந்து பின்வாங்குவது போல் காட்டிக்கொள்வதாகவும் கூறப்படுகிறது.

Categories

Tech |