சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்த வாலிபரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர்.
திருவாரூர் மாவட்டத்தில் உள்ள திருத்துறைப்பூண்டி பகுதிகள் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்யப்படுவதாக காவல்துறையினருக்கு ரகசிய தகவல் கிடைத்துள்ளது. அந்த தகவலின் படி இன்ஸ்பெக்டர் கழனியப்பன் , பிரான்சிஸ் ஆகியோர் கொண்ட குழுவினர் அப்பகுதியில் சோதனை செய்தனர். அப்போது அங்கு சந்தேகத்தின் பெயரில் நின்று கொண்டிருந்த வாலிபரை காவல்துறையினர் அழைத்து விசாரணை செய்துள்ளனர்.
அந்த விசாரணையில் அருண்குமார் என்பவர் சட்டவிரோதமாக கஞ்சா விற்பனை செய்தது தெரியவந்துள்ளது. இதனையடுத்து காவல்துறையினர் அருண்குமார் கைது செய்துள்ளனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் அவரிடம் இருந்த கஞ்சாவை பறிமுதல் செய்து தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.