உக்ரைனின் மிக முக்கியமான துறைமுக நகரமான Odesa மீது ரஷ்ய ஏவுகணை தாக்குதல் நடத்திய சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த ஞாயிற்றுக்கிழமை அன்று Odesa நகரின் மீது ரஷ்ய ராணுவம் ஏவுகணை தாக்குதல் நடத்தும் புகைப்படங்கள் மற்றும் வீடியோ ஆதாரங்களை அந்நாட்டு செய்தி நிறுவனங்கள் வெளியிட்டுள்ளன. மேலும் நகரின் முக்கியமான உள்கட்டமைப்பின் மீதும் ரஷ்ய ராணுவம் தாக்குதல் நடத்தியதாக வெளியுறவு துறை அதிகாரி கூறியுள்ளார். இந்த தாக்குதலில் யாருக்கும் எந்த உயிர் சேதமும் ஏற்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
Categories