கை, கால்கள் கட்டப்பட்டு நிர்வாண நிலையில் பெண்ணின் சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சேலம் மாவட்டத்தில் உள்ள பகடப்பாடி பகுதியில் விவசாயியான அசோகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் செல்வராணி என்ற பெண்ணை 2-வதாக திருமணம் செய்து கொண்டார். இந்த தம்பதிகளுக்கு ஒரு மகன் இருக்கிறான். கடந்த 31-ஆம் தேதி வீட்டை விட்டு வெளியே சென்ற செல்வராணி நீண்ட நேரமாகியும் திரும்பி வரவில்லை. இந்நிலையில் அப்பகுதியில் இருக்கும் விவசாய தோட்டத்து கிணற்றில் துர்நாற்றம் வீசியதால் தோட்டத்து உரிமையாளர் அங்கு சென்றுள்ளார். அப்போது கிணற்றில் கை, கால்கள் கட்டப்பட்டு நிர்வாணமான நிலையில் பெண்ணின் சடலம் மிதப்பதை பார்த்து அவர் அதிர்ச்சி அடைந்து உடனடியாக காவல்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளார்.
அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற காவல்துறையினர் பெண்ணின் சடலத்தை கைப்பற்றி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் நடத்திய விசாரணையில் சடலமாக மீட்கப்பட்ட பெண் செல்வராணி என்பது தெரியவந்துள்ளது. இந்நிலையில் செல்வராணி கற்பழித்து கொலை செய்யப்பட்டாரா என்று பல்வேறு கோணங்களில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.