Categories
திருவாரூர் மாவட்ட செய்திகள்

உடனடியாக ஊதியத்தை வழங்க வேண்டும்…. ஏ.ஐ.டி.யூ.சி. சங்கத்தினரின் போராட்டம்…. திருவாரூரில் பரபரப்பு….!!

சி.ஐ.டி.யூ.சி. சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருவாரூர் மாவட்டத்தில் உள்ள பாலகிருஷ்ணன் நகரில் அமைந்துள்ள தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக அலுவலகம் முன்பு நுகர் பொருள் வாணிப கழகம் மற்றும்  ஏ.ஐ.டி.யு.சி. சுமைதூக்கும் தொழிலாளர்கள் சங்கம் சார்பில் போராட்டம் நடைபெற்றது. இந்த போராட்டமானது நிர்வாக குழு உறுப்பினர் சிவா தலைமையில் நடைபெற்றது. இந்நிலையில்  நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கியிருக்கும் நெல் மூட்டைகளை சேமிப்பு   இடங்களுக்கு அனுப்ப வேண்டும், நெல் மூட்டையில் ஏற்படும் இழப்பை தொழிலாளர்கள் மீது சுமத்த கூடாது.

மேலும் சுமை தூக்கும் தொழிலாளர்களுக்கு நிலுவையிலுள்ள சம்பளத்தை உடனடியாக வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடைபெற்றது. இதில் மாநில பொது செயலாளர் குணசேகரன்,  ஏ.ஐ.டி.யு.சி  மாவட்ட செயலாளர் சந்திரசேகர்,பொதுச்செயலாளர் சந்திரகுமார், மாநில செயலாளர் கலியபெருமாள், உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டு கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷம் எழுப்பியுள்ளனர். இதனால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.

Categories

Tech |