சேலம் மாவட்டத்தில் உள்ள ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் ரோட்டில் மூங்கில் ஏரி அருகே கடந்த 2 நாட்களுக்கு முன்பு இரவு நேரத்தில் ஓமலூரில் இருந்து தாரமங்கலம் செல்லும் அரசு டவுன் பஸ் மற்றும் சங்ககிரியில் இருந்து ஓமலூருக்கு வந்த ஒரு அரசு பஸ் போன்றவற்றை அடையாளம் தெரியாத மர்ம நபர்கள் 6 பேர் மோட்டார் சைக்கிளில் வந்து பஸ்சின் முன்பக்க கண்ணாடியை உடைத்து விட்டு தப்பித்து சென்றுள்ளனர். அப்போது ரோட்டில் பழைய டயர்களை போட்டு எரித்து விட்டு, அந்த வழியாக வந்த ஆம்புலன்சை நிறுத்தி மூன்று பேரும் மோட்டார் சைக்கிளில் தப்பி சென்றுள்ளனர்.
பஸ் கண்ணாடியை உடைத்தவர்கள் வன்னியர்களுக்கு இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என கோஷமிட்டு பஸ் கண்ணாடியை உடைத்ததாக கூறி அரசு பஸ் டிரைவர்கள் ஓமலூர் போலீசில் புகார் அளித்துள்ளனர். இதன்பேரில் ஓமலூர் போலீஸ் இன்ஸ்பெக்டர் தொல்காப்பியன் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகிறார். இந்த நிலையில் பஸ் கண்ணாடியை உடைத்து 5 பேர் விழுப்புரம் மாவட்டம் விக்கிரவாண்டி இருப்பதாக தகவல் கிடைத்துள்ளது. அதன்பேரில் போலீசார் அங்கு விரைந்து சென்று அவர்களை பிடித்து உள்ளனர்.