Categories
கள்ளக்குறிச்சி மாவட்ட செய்திகள்

தீப்பிடித்து எரிந்த துணை மின்நிலையம்…. அதிர்ச்சியில் ஊழியர்கள்…. பெரும் பரபரப்பு…!!

திடீரென  மின்நிலையத்தில் தீ விபத்து ஏற்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கள்ளக்குறிச்சி மாவட்டத்தில் உள்ள உளுந்தூர்பேட்டை பகுதியில் துணை மின்நிலையம் அமைந்துள்ளது. இங்கு நேற்று திடீரென தீ விபத்து ஏற்பட்டது. இதுகுறித்து உளுந்தூர்பேட்டை தீயணைப்புத்துறைக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அந்த தகவலின்படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற  தீயணைப்புத் துறையினர் நீண்ட நேரப் போராட்டத்திற்குப் பிறகு தீயை அணைத்தனர்.

அதன்பிறகு மின் அலுவலக ஊழியர்கள் சீரமைப்பு பணியில் ஈடுபட்டனர். இதனால் ஏற்பட்ட மின் தடையால் பொதுமக்கள் மிகுந்த அவதிக்குள்ளாகினர். மேலும் துணை மின் நிலையத்தில் சீரமைப்பு பணிகள் முடிவடைந்த பிறகு குறைந்த மின்னழுத்தத்துடன் மின்சாரம் வினியோகிக்கப்பட்டது.

Categories

Tech |