Categories
உலக செய்திகள்

கடைகள், வணிகங்கள்…. உக்ரைனில் மீண்டும் திறந்தாச்சு…. வெளியான தகவல்…..!!!!!

உக்ரைனின் Brovary நகரில் கடைகள் மற்றும் வணிகங்கள் மீண்டும் திறக்கப்பட்டு இருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தலைநகர் கீவிலிருந்து கிழக்கே 12 மைல் தொலைவிலுள்ள Brovary நகரை மீண்டும் கைப்பற்றி இருப்பதாக உக்ரைன் அதிகாரிகள் அறித்ததை அடுத்து, அங்கு கடைகள், வணிகங்கள் திறக்கப்பட்டுள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளது. தொலைக்காட்சியில் உரையாற்றிய Brovary நகர மேயர், Brovary மாவட்டத்தில் இருந்து ரஷ்யபடைகள் வெளியேறி விட்டனர்.

இப்போது மீத உள்ள ரஷ்ய வீரர்கள் ராணுவ உபகரணங்கள் மற்றும் குறிப்பாக கண்ணி வெடிகளை உக்ரைனிய படைகள் அகற்றி வருகின்றனர் என்று மேயர் தெரிவித்து உள்ளார். தலைநகர் கீவ்வை சுற்றியுள்ள Bucha, Makariv மற்றும் Borodyanka மீண்டும் கைப்பற்றப்பட்டதாக உக்ரைன அதிகாரிகள் அறிவித்து இருந்தனர். அதனை தொடர்ந்து சமீபத்திய பகுதியாக தற்போது Brovary நகரை உக்ரைன் படைகள் ரஷ்யா படைகளிடம் இருந்து மீட்டுள்ளனர்.

Categories

Tech |