Categories
மாநில செய்திகள்

5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தங்களது பள்ளியிலேயே எழுதலாம்- அமைச்சர் செங்கோட்டையன்..!!

தமிழகத்தில் 5, 8ஆம் வகுப்பு பொதுத்தேர்வை தங்களது பள்ளியிலேயே மாணவர்கள் எழுதலாம் என்று பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார்.

தமிழகத்தில் பொதுத் தேர்வுகள் நடப்பு கல்வியாண்டில் 5 மற்றும்  8ஆம்  வகுப்புக்கும்  நடத்தப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இதற்கு அரசியல் கட்சி தலைவர்கள், சமூக ஆர்வலர்கள் உட்பட பலரும் எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். பேனாவை சரியாக பிடித்து எழுத தெரியாத வயதில் பொது தேர்வா என பலரும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர்.

மேலும் தேர்வு எழுதும் 5ஆம் வகுப்பு மாணவர்கள் 1கி.மீ தூரம் உள்ள வேறு ஒரு பள்ளியிலும், 8ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்கள் 3 கி.மீ தூரம் உள்ள வேறு ஒரு பள்ளியிலும் தேர்வு எழுத வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளதாக தகவல் வெளியானது. 5 ஆம் வகுப்பு மாணவர்கள் எப்படி தனியாக 1கிமீ தூரம் சென்று தேர்வை எழுதுவார்கள். இதற்காக மாணவர்களின் பெற்றோர்கள் வேலையை விட்டுவிட்டு மாணவர்களை  அழைத்து சென்று வருவது பெரும் சிரமத்தை ஏற்படுத்துவதாக பலரும் தெரிவித்து வருகின்றனர்.

இந்த நிலையில் சென்னையில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் செய்தியாளர்களை சந்தித்து பேட்டியளித்தார். அப்போது அவர் பேசியதாவது, 5 பேர் இருந்தாலும் 8 பேர் இருந்தாலும் தங்களது பள்ளிகளிலேயே பொது தேர்வு தேர்வு எழுதலாம். 5 மற்றும் 8 ஆம் வகுப்பு மாணவர்கள் அந்தந்த பள்ளிகளிலேயே பொதுத்தேர்வு எழுத ஏற்பாடு செய்யப்படும். பயிலும் பள்ளியிலேயே பொதுத்தேர்வு எழுதும் வகையில் இன்று மாலைக்குள் ஆணை பிறப்பிக்கப்படும் என்று அவர் தெரிவித்துள்ளார்.

Categories

Tech |