அடையாளம் தெரியாத நபர் பிணமாக கிணற்றில் மிதந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
நாமக்கல் மாவட்டம் ராசிபுரத்தை அடுத்துள்ள ஒனாச்சிகாடு என்ற பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் அடையாளம் தெரியாத ஆண் பிணம் ஒன்று மிதந்து கொண்டிருந்தது. இதனை பார்த்த அப்பகுதியினர் உடனடியாக புதுசத்திரம் காவல்நிலையத்திற்கு தகவல் தெரிவித்தனர். தகவலறிந்த போலீசார், தீயணைப்பு வீரர்கள் மற்றும் வருவாய்த்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பிணத்தை மீட்பதர்க்கான முயற்சியில் ஈடுபட்டனர்.
மேலும் இரவு நேரம் என்பதால் சுமார் 2 மணி நேரம் போராடி கிணற்றில் கிடந்த பிணத்தை மீட்டு உடற்கூறு ஆய்விற்கு அனுப்பி வைத்தனர். இதனையடுத்து அவர் சட்டை பையில் இருந்த செல்போன், ஆதார் கார்டு போன்ற ஆவணங்களை வைத்து உயிரிழந்தவர் யார் என்றும் இறந்ததற்கான காரணம் குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.