TNPSC குரூப் 4 தேர்வுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கு, முக்கிய அறிவிப்பை தேர்வாணையம் வெளியிட்டுள்ளது.
தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் மூலம் குரூப் 4 தேர்வுக்கான அறிவிப்பை கடந்த மாதம் வெளியிட்டுள்ளது. மேலும் இந்த தேர்வுக்கான பாடத்திட்டம் மற்றும் தேர்வு மாதிரி ஆகிய விவரங்களை பற்றி கீழே கொடுக்கப்பட்டுள்ளது. அதன் மூலம் தேர்வர்கள் தங்களை தேர்வுக்கு நன்றாக தயார்படுத்தி கொள்ளலாம் என தெரிவித்துள்ளது.
TNPSC தேர்வு செயல் முறை 2 வகையில் நடைபெறுகிறது. அதன்படி,
- விண்ணப்பதாரர்கள் எழுத்துத் தேர்வு மற்றும் நேர்முக தேர்வின் அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்படுவர்.
- மேலும் இந்த பணிகளுக்கான எழுத்து தேர்வானது வருகிற ஜூலை 24 அன்று நடைபெற உள்ளது.
TNPSC தேர்வு மாதிரி :
Exam Type | Subjects | No. of Questions | Marks | Duration | Minimum Qualifying Marks |
Objective Type | Tamil Eligibility-cum-Scoring Test* (SSLC Standard) | 100 | 150 | 3 Hours | 90 (For all communities) |
General Studies (SSLC Standard) | 75 | 150 | |||
Aptitude & Mental Ability Test (SSLC Standard) | 25 | ||||
Total | 200 | 300 |
இந்த குரூப் 4 தேர்வானது 3 மணி நேரம் நடைபெற உள்ளது. இத்தேர்வில் 200 வினாக்கள் இடம் பெற்றிருக்கும். இதற்கு கல்வித் தகுதியாக 10 ஆம் வகுப்பு முதல் பட்டப்படிப்பு, பட்டயப்படிப்பு என எது முடித்திருந்தாலும் விண்ணப்பிக்கலாம். மேலும் இந்த தேர்வு எழுத 18 வயது நிரம்பியவராக இருக்க வேண்டும்.மேலும், தமிழ் மொழியில் 100 கேள்விகள் மற்றும் பொது அறிவில் 100 கேள்விகள் என மொத்தம் 200 கேள்விகள் கேட்கப்படும். 150 + 150 என 300 மதிப்பெண்கள் வழங்கப்படும். இதில், தமிழில் 150 மதிப்பெண்களுக்கு 60 மதிப்பெண்கள் எடுத்தால் மட்டுமே அடுத்த தாள் மதிப்பிடப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.