இலங்கையின் பொருளாதார நிலைக்கு ராஜபக்சே குடும்பத்தினர் மட்டுமல்லாமல் முந்தைய அரசு முறையாக செயல்படவில்லை என அனந்தி சசிதரன் குற்றம்சாட்டியுள்ளார்.
ஈழத்தமிழர்களே அழிப்பதற்காக உலக நாடுகளிடம் வாங்கிய கடனால் தற்போது இலங்கையில் பொருளாதார நெருக்கடி நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் முன்னாள் அமைச்சர் அனந்தி சசிதரன் குறை கூறியுள்ளார். தஞ்சையில் நேற்று செய்தியாளர்களிடம் பேசிய அவர், கடந்த 30 ஆண்டுகாலம் ஈழத்தமிழர்களை கொண்டுள்ள பிரச்சினைகளை தற்போது இலங்கை மக்களும் எதிர்கொண்டு வருவதாக கூறியுள்ளார்.
இலங்கை அரசின் சொத்துக்கள் அனைத்தும் உருமாற்றம் செய்யப்பட்டு ராஜபக்சே குடும்பத்தாரிடம் இருப்பதாக கூறியுள்ளார். மேலும் ஆட்சி மாறினாலும் காட்சிகள் மாறவில்லை என்றார். ஆட்சியாளர்கள் கொள்ளையடித்த பணத்தில் சுகவாழ்வு வாழும் போது ஏழை எளிய மக்கள் மட்டும் பாதிக்கப்பட்டு இருப்பதாக அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
இலங்கையில் பொருளாதார நிலையை ராஜபக்ஷே குடும்பத்தினர் மட்டுமல்லாமல், முந்தைய அரசும் முறையாக செயல்படவில்லை என அனந்தி சசிதரன் கூறியுள்ளார். தற்போது இக்கட்டான இந்த சூழ்நிலையில் இலங்கை மக்கள் மீண்டு வர உலக நாடுகள் உதவ வேண்டும் எனவும் அவர் கேட்டுக் கொண்டுள்ளார்.