வங்கக்கடலில் வருகின்ற ஏப்ரல் 7 ஆம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. என்று தென் தமிழகம், மேற்கு தொடர்ச்சி மலையை ஒட்டிய மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கு வாய்ப்பு உள்ளது.
அதன்படி நாளை மற்றும் நாளை மறுநாள் தென் தமிழகம், புதுவை, காரைக்காலில் மழைக்கு வாய்ப்பு உள்ளது. ஏப்ரல் 6 மற்றும் 7 ஆகிய தேதிகளில் அந்தமான், வங்கக்கடல் பகுதியில் 60 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசும் என்பதால் மீனவர்கள் கடலுக்கு செல்ல வேண்டாம் என வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை விடுத்துள்ளது. இதையடுத்து தமிழகத்தில் இன்னும் நான்கு நாட்களுக்கு மழை பெய்ய வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.