பாகிஸ்தான் நாடாளுமன்றத்தில் இம்ரான்கான் அரசுக்கு எதிராக கொண்டு வந்த நம்பிக்கையில்லாத் தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பு நிராகரிக்கப்பட்ட நிலையில் அந்நாட்டின் புதிய அதிபரை எதிர்க்கட்சிகள் அறிவித்துள்ளது.
பாகிஸ்தானின் பிரதமரான இம்ரான்கான் ஆட்சியில் அந்நாட்டின் பொருளாதாரம் சீரழிந்து விட்டதாக எதிர்கட்சிகள் குற்றம் சாட்டி அவர் மீது நம்பிக்கையில்லா தீர்மானத்தை கொண்டு வந்துள்ளார்கள். இதற்கான வாக்கெடுப்பு இன்று நாடாளுமன்றத்தில் நடைபெறவிருந்த நிலையில் பிரதமர் இம்ரான்கான் அதிபரிடம் அதனைக் கலைத்து மீண்டும் பாகிஸ்தானில் தேர்தல் நடத்த கோரிக்கை விடுத்துள்ளார்.
இதனை ஏற்றுக் கொண்ட அதிபர் ஆரிப் ஆல்வி பாகிஸ்தானில் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் என்று அறிவித்துள்ளார். அவ்வாறு தேர்தல் நடத்தப்படும் வரை இம்ரான்கானே பிரதமர் பதவியில் நீடிப்பார் என்ற தகவல் வெளியாகியுள்ளது. இதற்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்த எதிர்க்கட்சிகள் பாகிஸ்தானின் புதிய பிரதமர் ஷெபாஷ் ஷெரிப் என்று அறிவித்துள்ளார்கள்.