Categories
உலக செய்திகள்

உக்ரைன்: ரோடு முழுவதும் எரிந்த நிலையில் கிடந்த சடலங்கள்…. வெளியான பகீர் தகவல்…..!!!!!

உக்ரைனின் புச்சா நகரமானது தலைநகர் கீவ்வை கைப்பற்றும் ரஷ்யாவின் கனவுகளுக்கு கல்லறையாக அமைந்ததாக அதிபர் ஜெலென்ஸ்கி தெரிவித்து இருக்கிறார். தலைநகர் கீவ்வை கைப்பற்றும் நோக்கத்தில் ரஷ்ய துருப்புகள் புச்சா நகரை மிகவும் சேதமாக்கியுள்ளது. சென்ற பிப்ரவரி 24ஆம் தேதி ரஷ்ய துருப்புகள் உக்ரைனுக்குள் புச்சா வழியே புகுந்துள்ளது. இதற்கு பதிலடியாக உக்ரைன் துருப்புகள் ரஷ்ய ராணுவ டாங்கிகள் அணிவகுப்பை மொத்தமாக சிதைத்துவிட்டது. இதன் காரணமாகவே கீவ் நகரை கைப்பற்றும் ரஷ்யாவின் திட்டம் பாலாகிவிட்டது. இந்நிலையில் புச்சா நகரிலிருந்து கடைசி ரஷ்ய ராணுவ வீரரும் கடந்த வெள்ளிக்கிழமை வெளியேறியதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

எனினும் ரஷ்யாவின் இந்த நகர்வானது கிழக்கு உக்ரைனில் கவனத்தை செலுத்தவே ரஷ்யா முன்னெடுத்து இருப்பதாக உக்ரைன் சுட்டிக்காட்டி உள்ளது. அதுமட்டுமல்லாமல் புச்சா நகரில் ரஷ்ய இராணுவம் நுழைந்த 2 (அல்லது) 3-வது வாரத்தில் தங்களது வேகத்தை இழந்ததாக நிபுணர்கள் தரப்பு தெரிவித்துள்ளது. அத்துடன் புச்சா நகரில் புகுந்த ரஷ்ய துருப்பில் 18-20 வயதுக்கு உட்பட்ட வீரர்களே இருந்துள்ளனர் என்றும் போதிய போர் பயிற்சி இல்லாமல் அவர்கள் திணறியதாகவும், ஆனால் கொடூர தாக்குதலை முன்னெடுத்து உள்ளதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்து இருக்கின்றனர்.

ரஷ்ய துருப்புகள் வெளியேறி புச்சா நகரில் உக்ரைன் இராணுவம் புகுந்தபோது தெருவில் மட்டும் எரிந்த நிலையில் 20 சடலங்களை காண நேர்ந்ததாகவும், பின்னால் கைகள் பிணைக்கப்பட்ட சூழலில் பல சடலங்களை மீட்டுள்ளதாகவும் இராணுவ தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. புச்சா நகர மேயர் கூறியபோது, ஒரே குழியில் சுமார் 280 சடலங்களை மொத்தமாக புதைக்கும் அவலநிலையும் ஏற்பட்டதாக குறிப்பிட்டுள்ளார். அத்துடன் நீண்ட 38 நாட்களுக்கு பின் முதன் முறையாக ரொட்டி சாப்பிட்டதாகவும் உள்ளூர் மக்கள் தெரிவித்துள்ளனர். மேலும் பூட்டப்பட்டிருந்த பல்வேறு குடியிருப்புகளில் ரஷ்ய துருப்புகள் புகுந்து கொள்ளையிட்டு சென்றுள்ளதாக தெரியவந்துள்ளது.

Categories

Tech |