இலங்கையின் உணவுத் தட்டுப்பாட்டை போக்குவதற்கு அந்நாட்டுக்கு இந்தியா சார்பாக 3 லட்சம் டன்அரிசி அனுப்பப்படவுள்ளது. இதில் முதற்கட்டமாக 40,000 டன் அரிசி அனுப்பப்படுகிறது. தென்னிந்திய துறைமுகங்களிலிருந்து இலங்கைக்கு சரக்கு கப்பல்கள் வாயிலாக அரிசி அனுப்பும் நடவடிக்கை தொடங்கப்பட்டுள்ளது. இதையடுத்து அடுத்தசில நாட்களில் சரக்கு கப்பல்கள் இலங்கையை சென்றடையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்தியா சார்பாக சரக்கு கப்பலில் அனுப்பிவைக்கப்பட்ட 40,000 டன் டீசல் இலங்கையை சென்றடைய உள்ளது. இது தொடர்பாக மும்பையை சேர்ந்த பட்டாபி அக்ரோ புட்ஸ் நிர்வாக இயக்குனர் கிருஷ்ணராவ் கூறியிருப்பதாவது, இலங்கைக்கு இந்தியாவால் மட்டுமே உதவ முடியும்.
இதரநாடுகளிலிருந்து கடல் மார்க்கமாக எந்த ஒரு பொருளையும் இலங்கைக்கு கொண்டுசெல்ல பல்வேறு வாரங்கள் தேவைப்படும். இந்தியாவிலிருந்து சிலநாட்களில் இலங்கைக்கு நிவாரண பொருட்களை அனுப்ப முடியும். ஆகவே முதல் கட்டமாக இந்தியாவிலிருந்து 40,000 டன் அரிசி இலங்கைக்கு அனுப்பப்படவுள்ளது. அதனை தொடர்ந்து அடுத்தசில மாதங்களில் 3 லட்சம் டன் அரிசி அனுப்பி வைக்கப்படும். இதன் வாயிலாக இலங்கையில் உணவுத்தட்டுப்பாடு குறையும். அத்துடன் அடுத்த சில வாரங்களில் இலங்கைக்கு தேவையான சர்க்கரை, கோதுமையும் அனுப்பி வைக்கப்படும் என அவர் தெரிவித்தார்.