இந்திய ரயில்வேயின் ஐஆர்சிடிசி ஏப்ரல் 1 முதல் ரயில்களில் படுக்கை விரிப்புகளை வழங்க இருக்கிறது. இந்தூர் மற்றும் மோவ்வில் இருந்து இயக்கப்படும் 11 ரயில்களில் கொரோனா பாதிப்புகள் குறைவதைக் கருத்தில் கொண்டு பயணிகள் ரயில்களில் படுக்கைகள் மற்றும் போர்வைகள் வழங்குவதை இந்திய ரயில்வே மீண்டும் தொடங்கவுள்ளது. கொரோனா தொற்று காரணமாக ரயில்களுக்குள் வழங்கப்படும் சேவைகளை ரயில்வே நிறுத்த வேண்டி இருந்தது. தற்போது ரயில்வே வாயிலாக ரயில்களின் ஏசி பெட்டிகளில் மீண்டும் போர்வைகள் வழங்கப்படும். இதனிடையில் தலையணைகள், போர்வைகள், தாள்கள் மற்றும் துண்டுகள் சீல் செய்யப்பட்ட கவரில் மூடப்பட்டு இருக்கும்.
2 ஆண்டுகளுக்கு பிறகு ரயில் பயணிகளுக்கு போர்வை படுக்கை விரிப்புகள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் இரண்டு வாரத்திற்குள் அனைத்து ரயில்களிலும் போர்வை, படுக்கை, விரிப்பு தலையணை வழங்கப்படும் என்று ரயில்வே அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அனைத்து பயணிகளுக்கும் போர்வை படுக்கை விரிப்புகள் தயாரிக்கும் பணி நடந்து வருகிறது. மொத்தமாக ஒரே நேரத்தில் அனைத்து ரயில்களிலும் வழங்காமல் படிப்படியாக வழங்க திட்டமிட்டுள்ளதாக கூறியுள்ளனர்.