ஜார்கண்டில் நடந்த தீவிர தேடுதல் வேட்டையின் பேரில் கள்ளத்தனமாக இயங்கிய சிறிய துப்பாக்கி தொழிற்சாலையை காவல்துறை அதிகாரிகள் கண்டறிந்துள்ளார்கள்.
ஜார்கண்ட்டை சேர்ந்த ஒருவரை அம்மாநில காவல்துறை அதிகாரிகள் கள்ள துப்பாக்கிப் புழக்கம் தொடர்பாக கைது செய்துள்ளார்கள். அவரிடம் நடந்த தீவிர விசாரணையின் பேரில் கொல்கத்தா படையினர் டும்கா மாவட்ட காவல்துறை அதிகாரிகளுடன் சர்வா கிராமத்தில் தீவிர தேடுதல் வேட்டையில் இறங்கியுள்ளார்கள். அப்போது ரவிக்குமார் என்பவர் கோதுமை மாவு மில் என்று கூறி கள்ளத்தனமாக சிறிய துப்பாக்கி தொழிற்சாலை ஒன்றை இயக்கி வந்துள்ளார்.
இதனை கண்டறிந்த கொல்கத்தா படையினர் அங்கிருந்து ஏராளமான பிஸ்டல், துப்பாக்கிகள் போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளார்கள். இவர்கள் 6 லேப் மிஷின்களை நிறுவி விதவிதமாக துப்பாக்கிகளை தயாரித்து நாடு முழுவதும் விற்பனை செய்து வந்துள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாக பிரியா தேவி என்ற பெண்மணி உட்பட 6 பேரை காவல் அதிகாரிகள் கைது செய்துள்ளார்கள். இந்த தொழிற்சாலையை நடத்தி வந்த ரவிக்குமார் என்பவர் காவல் அதிகாரிகளிடமிருந்து தப்பி ஓடியுள்ளார்.