Categories
உலக செய்திகள்

ரஷ்யா ஆக்கிரமித்த பகுதியை மீட்ட உக்ரைன்…. அணுமின் நிலையத்தில் கொடி ஏந்தி நின்ற வீரர்…!!!

செர்னோபிலில் உக்ரைன் நாட்டின் ஒரு ராணுவ வீரர், கொடி ஏந்தி கொண்டு நின்ற புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின் போரை தொடங்கிய போது, ஆக்கிரமித்த ப்ரிபியாட் பகுதியை உக்ரைன் மீண்டும் கைப்பற்றி விட்டது. இதனை அதிகாரிகள் இன்று உறுதிப்படுத்தியிருக்கிறார்கள். கடந்த வாரத்தின் கடைசியில் ரஷ்ய வீரர்கள் செர்னோபில் அணுமின் நிலையத்திலிருந்து வெளியேறி விட்டதாக உக்ரைன் தெரிவித்தது.

கடும் இழப்பாலும், கதிர்வீச்சு பாதிப்பாலும், படைகள் வெளியேறியதாக அறிவிக்கப்பட்டது. ரஷ்யப்படை பின்வாங்கியது, உக்ரைனின் முக்கியமான வெற்றி என்று கருதப்படுகிறது. எனவே, உக்ரைன் வீரர் ஒருவர் அங்கு கொடி ஏந்தி நிற்கும் புகைப்படம் வெளியாகியிருக்கிறது.

அந்த ஆலையில் அனுசக்தி அபாயம் உண்டாகும் அச்சத்திற்கு இடையில், பணியாளர்கள் பணைய கைதிகளாக வைக்கப்பட்டனர். மேலும் சரியாக ஓய்வின்றி பணி செய்ய வேண்டிய கட்டாயத்திற்கு ஆளாகினர். இதற்கிடையில் கதிர்வீச்சால் ஒரு ரஷ்ய ராணுவ வீரர் பலியானதாக  கூறப்பட்டிருக்கிறது.

Categories

Tech |