Categories
தேசிய செய்திகள்

ராஜஸ்தான்: புத்தாண்டு நாளன்று திடீர் மோதல்…. ஊரடங்கு உத்தரவு அமல்…. அதிகாரிகள் தகவல்…..!!!!!

ராஜஸ்தான் மாநில கரெளலிநகரில் பாரம்பரியம் புத்தாண்டு பேரணியின் போது இருபிரிவினர் இடையே ஏற்பட்ட மோதல் காரணமாக அந்நகரில் ஊரடங்கு உத்தரவானது அமல்படுத்தப்பட்டது. இது குறித்து காவல்துறை அதிகாரிகள் கூறியபோது “ஹிந்துப் புத்தாண்டின் முதல் நாளை முன்னிட்டு கரெளலியில் முஸ்லிம்கள் அதிகம் வாழும் பகுதியில் ஒருபிரிவினா் இருசக்கர வாகனப் பேரணியில் ஈடுபட்டனா். அப்போது அவா்கள் மீது சிலா் கற்களை வீசினா். இது இருபிரிவினா் இடையே மோதலுக்கு வழிவகுத்தது.

இந்நிலையில் இதில் சில இருசக்கர வாகனங்கள், கடைகளுக்குத் தீ வைக்கப்பட்டது. மேலும் கல்வீச்சில் 25க்கும் மேற்பட்டவா்கள் காயமடைந்தனா். அவா்களில் 7 நபர்கள் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனா். இதில் சீரியசாக இருந்த ஒருவா் ஜெய்ப்பூா் மருத்துவமனைக்கு மேல் சிகிச்சைக்காக அனுப்பி வைக்கப்பட்டாா். அதன்பின்  மற்றவா்கள் சிகிச்சை பெற்ற பின் வீடு திரும்பினா். இச்சம்பவத்தால் கரெளலியில் ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. அத்துடன் அங்கு 600 காவல்துறையினர் பாதுகாப்புப் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனா்” என்று தெரிவித்தனா்.

Categories

Tech |