அஜித்தின் வலிமை திரைப்படம் வெளியான ஒரே வாரத்தில் 500 மில்லியன் நேரலை நிமிடங்களை கடந்துள்ளதாக ஓடிடி இணையதளம் சார்பாக ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழ் திரையுலக நடிகரான அஜித்தின் வலிமை திரைப்படம் கடந்த மார்ச் மாதம் 24 ஆம் தேதி தியேட்டர்களில் வெளியானது. இந்த திரைப்படம் ஒரு மாத காலத்திற்கு பிறகு ஓடிடி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் வெளியான முதல் நாளிலேயே 100 மில்லியன் நேரலை நிமிடங்களை கடந்துள்ளது.
அதுமட்டுமின்றி ஒரே வாரத்தில் வலிமை திரைப்படம் 500 மில்லியன் நேரலை நிமிடங்களை கடந்துள்ளதாக ஓடிடி இணையதளம் சார்பாக ட்விட்டரில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த திரைப்படம் ஓடிடி இணையதளத்தில் முந்தைய அனைத்து படங்களின் சாதனைகளையும் முறியடித்து விட்டதாகவும் தெரிவித்துள்ளது.