Categories
தேசிய செய்திகள்

ஆன்லைன் குற்றங்களை தடுக்க…. பெண்களே உடனே இந்த நம்பருக்கு அழையுங்க…!!!!!

நாடு முழுவதும் தற்போது ஆன்லைன் குற்றங்கள் அதிகரித்து வருகின்றன. அந்த வகையில் மராட்டிய மாநிலத்தில் பெண்கள் மற்றும் குழந்தைகள் மீதான குற்றங்கள் அதிகரித்து வருகிறது.  அதனை தடுக்கும் விதமாக காவல்துறையினருக்கு  தெரிவிக்கும் வகையில் 112 என்ற இலவச உதவி தொலைபேசி எண்ணை உத்தவ் தாக்கரே நேற்று தொடங்கி வைத்தார்.

பின்னர் இதுகுறித்து அவர் பேசுகையில், பெண்கள் குழந்தைகள் இணையவழி குற்றங்களால்  பாதிக்கப்படும்போது 112 என்ற நம்பருக்கு போன் செய்து காவல் நிலையத்திற்கு தெரிவிக்கலாம். இதனையடுத்து உடனடியாக காவல்துறையினர் நடவடிக்கை எடுப்பார்கள். உலக தரத்தில் மராட்டிய காவல்துறையை நவீனமயமாக்கும் பணிகளில் அரசு கவனம் செலுத்தி வருகிறது என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |