Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் “1000 கோவில்களில்”…. திருப்பணி நடவடிக்கைகள்…. அமைச்சர் வெளியிட்ட தகவல்….!!!!

கோயில்களில் திருப்பணி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என அமைச்சர் தெரிவித்துள்ளார்.

தமிழக முதல்வர் மு.க ஸ்டாலின் அவர்கள் இந்த ஆண்டு 1000 கோயில்களில் திருப்பணி நடத்த வேண்டும் என உத்தரவிட்டுள்ளார். இந்த உத்தரவின்படி கோயில்களில் திருப்பணி செய்ய நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருவதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே சேகர் தெரிவித்துள்ளார். காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள சீட்டனேஞ்சேரி பகுதியில் பிரசித்தி பெற்ற சிவகாம சுந்தரி சமேத காளீஸ்வரர் திருக்கோயில் அமைந்துள்ளது. இந்த கோவிலில் கடந்த 22 வருடங்களாக தேர் சிதிலமடைந்து தேரோட்டம் நடைபெறாமல் இருந்தது. தற்போது ரூபாய் 80 லட்சம் மதிப்பில் உபயதாரர் நிதி உதவியுடன் புதிய தேர் வடிவமைக்கப்பட்டு தேரோட்டம் நடைபெற்றது. இந்த தேரோட்ட விழாவில் அமைச்சர் பி.கே சேகர் கலந்துகொண்டு கொடியசைத்து தேரோட்டத் திருவிழாவை தொடங்கி வைத்தார்.

அதன்பிறகு அமைச்சர் பி.கே சேகர் செய்தியாளர்களிடம் பேட்டியளித்தார்.‌ இவர் தி.மு.க ஆட்சி பொறுப்பில் ஏற்றவுடன் 100-க்கும் மேற்பட்ட கோயில்களில் பாதியில் நிறுத்தப்பட்டிருந்த பணிகளை முடித்து கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. இதனையடுத்து 50-க்கும் மேற்பட்ட தனியாருக்கு சொந்தமான கோவில்களில் கும்பாபிஷேகம் நடைபெற்றுள்ளது. கடந்த ஆண்டு 1200 கோயில்களுக்கு திருப்பணி நடத்த உத்தரவிடப்பட்டது. இந்த ஆண்டு 1000 கோயில்களில் திருப்பணி செய்திட தமிழக முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதன்படி கோயில்களில் ஓடாமல் இருந்த தேர்கள், சீரமைக்கப்பட வேண்டிய தெப்பக் குளங்கள், கோயில்களின் ஸ்தல விருட்சங்கள் ஆகியவற்றை அடையாளம் கண்டு சீரமைக்கும் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

இதற்காக ரூபாய் 100 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து சுமார் 1000 ஆண்டு பழமையான கோயில்களுக்கும் திருப்பணிகள் நடத்த கேட்டுக் கொண்டுள்ளார். இவர் கோயில் திருப்பணிகளை செய்ய விரும்புபவர்களை‌ அரசு இருகரம் கூப்பி வரவேற்கிறது என்றார். மேலும் ஆன்மீகத்தில் நாட்டம் உள்ளவர்கள் எந்த கட்சியாக சேர்ந்தவர்களாக இருந்தாலும் அவர்களை திருக்கோவில் அறங்காவலர்களாக நியமியுங்கள். மேலும் அறநிலையத்துறையின் குறைகளை கேட்டறிய புதிய செயலி ஒன்று தொடங்கப்பட்டுள்ளது. இந்த செயலியின் மூலம் குறைகளை கூறலாம். அதற்கான தீர்வுகள் 15 நாட்களுக்குள் ஆய்வு செய்யப்பட்டு உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அமைச்சர் கூறியுள்ளார்.

Categories

Tech |