Categories
சினிமா

அடிதூள்..! 20 மணி நேரத்தில்…. 25 மில்லியன் பார்வையாளர்கள்…. பீஸ்ட் புதிய சாதனை…!!!!!

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ” பீஸ்ட்” திரைப்படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன் என திரையுலக பிரபலங்கள் பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் நேற்று வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. நடிகர் விஜய் பேசும் அதிரடி வசனங்கள் மற்றும் சண்டை காட்சிகள் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. டிரைலரில் விஜய் ” நான் அரசியல்வாதி அல்ல, நான் போராளி” என பேசிய வசனத்தை ரசிகர்கள் அதிகளவில் டிரெண்ட் செய்து வருகின்றனர். இந்நிலையில் பீஸ்ட் டிரைலர் வெளியான 20 மணி நேரத்தில் 2 மில்லியன் லைக்கும் 25 மில்லியன் பார்வையாளர்களையும் கடந்து புதிய சாதனை படைத்துள்ளது.

Categories

Tech |