Categories
தேசிய செய்திகள்

இந்தியாவில் வரலாறு காணாத வெப்பநிலை…. வெளியான அதிர்ச்சி ரிப்போர்ட்…!!!!

வரலாறு காணாத வெயிலை இந்தியா இந்த ஆண்டு கண்டுள்ளது. இது இன்னும் அதிகரிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இதுவரை பதிவான அளவீடுகளிலேயே மிக வெப்பமான மார்ச் மாதம் இந்த ஆண்டு தான் என இந்திய வாநிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஓவ்வொரு ஆண்டும் மார்ச் 15 முதல் மே 15 வரையிலான பங்குனி, சித்திரை மாதங்கள் இந்தியாவின் வெயில் காலமாக அறியப்படுகிறது. அந்த வகையில் இந்த ஆண்டின் மார்ச் மாத வெப்பத்தை கணக்கிடுகையில் இதுவரை பதிவு செய்யப் பட்டதிலேயே அதிகமான வெயில் இந்த ஆண்டுதான் பதிவாகியிருக்கிறது. சராசரியாக 33.1 சென்டிகிரேட் வெப்பம் பதிவாகியுள்ளது. இதற்கு முன் 2010ஆம் ஆண்டு மார்ச் மாதம் 33.09 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது.

உச்சபட்சமாக மார்ச் 20ம் தேதி டெல்லியில் 39.9 டிகிரி வெப்பம் பதிவாகியிருந்தது. ஹரியானா, சண்டிகர், டெல்லி, பஞ்சாப், ராஜஸ்தான் உள்ளிட்ட மாநிலங்களில் அதிகபட்ச வெப்பநிலை சராசரியை விட 4.5 டிகிரி வரை உயர்ந்திருக்கிறது. இப்படியான வெப்பநிலை அதிகரிப்பு இந்தியா மட்டுமல்லாமல் உலகம் முழுவதும் காணப்படுகிறது. உலகளவிலான அதிவெப்பமான ஆண்டுகள் கடந்த இருபது ஆண்டுகளாகத்தான் இருந்துள்ளன. இதேபோல இந்த ஆண்டு இந்தியாவில் கோடை மழையும் குறைந்த அளவே பதிவாகும் என ஆய்வாளர்கள் எச்சரித்துள்ளனர்.

Categories

Tech |