தூய்மை பணியாளர்களுக்கு தொழிலாளர் வைப்பு நிதி விவரங்கள் அடங்கிய ரசீது வழங்கப்பட்டுள்ளது.
கன்னியாகுமரி மாவட்டத்தில் கடந்த 14-ம் தேதி தேசிய துப்புரவு தொழிலாளர் நல ஆணையத்தின் தலைவர் வெங்கடேசன் ஆய்வு மேற்கொண்டார். இவர் மாநகராட்சியில் வேலை பார்க்கும் அனைத்து தூய்மை பணியாளர்களுக்கும் தொழிலாளர் வைப்பு நிதி விவரங்கள் அடங்கிய ரசீது மற்றும் தொழிலாளர் மாநில காப்பீடு அடையாள அட்டை வழங்குமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
இதன்படி நேற்று மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் வைத்து தற்காலிக தூய்மை பணியாளர்களுக்கு தொழிலாளர் மாநில காப்பீடு அடையாள அட்டை மற்றும் தொழிலாளர் வைப்பு நிதி வழங்கப்பட்டது. இதில் மொத்தம் 637 தூய்மைப் பணியாளர்கள் கலந்து கொண்டனர். இந்த விழாவை மாவட்ட ஆட்சியர் அரவிந்த் மற்றும் மேயர் மகேஷ் ஆகியோர் தொழிலாளர்களுக்கு வைப்பு நிதி மற்றும் அடையாள அட்டை வழங்கி தொடங்கி வைத்தனர்.