தனது உடல்நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலினுக்கு நன்றி என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார். இது தொடர்பாக சீமான் வெளியிட்டுள்ள ட்வீட்டில், “எனது உடல்நலம் குறித்து அலைபேசியில் அழைத்து அக்கறையுடன் விசாரித்த தமிழ்நாடு முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு எனது நன்றியையும், அன்பையும் தெரிவித்துக்கொள்கிறேன்” என தெரிவித்துள்ளார்.
முன்னதாக, திருவொற்றியூரில் அண்ணாமலை நகர் பகுதியில் வீடுகள் இடிக்கப்பட்டதை தொடர்ந்து, அதில் பாதிக்கப்பட்ட மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். அந்த மக்களை சந்திக்க நேற்று நேரில் சென்றிருந்தார் நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான். மக்களை சந்தித்தப் பின்னர், பத்திரிகையாளர்களை சந்தித்த பிறகு அவர் திடீரென மயங்கி விழுந்தார். இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அவரை ஆம்புலன்ஸ் மூலமாக மருத்துவமனைக்கு அழைத்து சென்று சிகிச்சையளிக்கப்பட்டது.