Categories
உலக செய்திகள்

இலங்கையில் அதிரடி…. 624 பேர் கைது…. என்ன காரணம்….??

 ஊரடங்கு உத்தரவை மீறியதாக போராட்டக்காரர்கள் 624 பேர் கைது செய்யப்பட்டுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

இலங்கையில் தற்போது நிலவி வரும் மோசமான பொருளாதார நிதி நெருக்கடி காரணமாக, அங்கு அத்தியாவசிய பொருட்களின் விலையானது விண்ணை முட்டும் அளவுக்கு அதிகரித்துள்ளது. இதனால் அங்குள்ள மக்கள் வீதிகளில் இறங்கி போராட்டம் நடத்த தொடங்கியுள்ளனர்.

இந்நிலையில் பல்வேறு இடங்களில் மக்கள் போராட்டம் நடத்த இருந்ததால், இலங்கை அரசானது நேற்று மாலை 6 மணி முதல் வருகின்ற திங்கள்கிழமை காலை 6 மணி வரை ஊரடங்கு உத்தரவை பிறப்பித்துள்ளது. அதன்படி நேற்று மாலை 6 மணியிலிருந்து ஊரடங்கு உத்தரவு அமலுக்கு வந்துள்ளது. இதனால் சமூக வலைத்தளங்களும் முடக்கப்பட்டுள்ளன. இந்நிலையில் ஊரடங்கு உத்தரவை மீறியதாக போராட்டக்காரர்கள் 624 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

Categories

Tech |