மாருதி சுஸூகி இந்தியாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனங்களில் ஒன்றாகும். கடந்த நிதியாண்டில் மட்டும் 2 லட்சத்துக்கு மேற்பட்ட கார்களை வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்து சாதனை படைத்துள்ளது. இது மாருதி சுஸூகி வரலாற்றில் ஒரு மாதத்தில் ஏற்றுமதி செய்யப்பட்ட அதிகபட்ச கார்களின் எண்ணிக்கையாகும். இதுவரை இந்நிறுவனம் 22 லட்சத்துக்கும் மேற்பட்ட கார்களை ஏற்றுமதி செய்துள்ளது.
100க்கும் மேற்பட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படும் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியான ஹிஷாசி டாக்யூச்சி கூறுகையில், “என்னுடைய வாழ்வில் மறக்க முடியாத நாளாக அமைந்துவிட்டது. நான் இந்த நிறுவனத்தின் புதிய நிர்வாக இயக்குநர் மற்றும் தலைமைச் செயல் அதிகாரியாக பொறுப்பேற்று கொண்டிருக்கிற இந்த வேளையில் மாருதி சுசுகி நிறுவனம் ஏற்றுமதியில் சிறப்புமிக்க சாதனை படைத்துள்ளது. இந்த வளர்ச்சி தொடர்ந்து அதிகரிக்கும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.