சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்த விபத்தில் ஓட்டுநர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பிவிட்டார்.
திருச்சி மாவட்டத்தில் இருந்து காய்கறிகளை ஏற்றுக்கொண்டு சரக்கு வேன் ஒன்று அறந்தாங்கி நோக்கி சென்று கொண்டிருந்தது. இந்நிலையில் திருச்சி- புதுக்கோட்டை தேசிய நெடுஞ்சாலையில் மேலூர் பகுதியில் சென்று கொண்டிருந்த போது திடீரென சரக்கு வாகனத்தின் டயர் வெடித்தது. இதனால் கட்டுப்பாட்டை இழந்த சரக்கு வேன் சாலையில் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அனைத்து காய்கறிகளும் சாலையில் கொட்டி வீணானது. மேலும் அதிர்ஷ்டவசமாக சரக்கு வேன் ஓட்டுனர் உயிர் தப்பினார்.
இதனை அடுத்து எஞ்சிய காய்கறிகளை மாற்றி வாகனத்தில் ஏற்றிக் எடுத்து சென்றுள்ளனர். இதுகுறித்து தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பொக்லைன் இயந்திரம் மூலம் சரக்கு வாகனத்தை மீட்டனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.