அடையாளம் தெரியாத வாகனம் மோதிய விபத்தில் 2 மயில்கள் இறந்த சம்பவம் பரிதாபத்தை ஏற்படுத்தியுள்ளது.
அரியலூர் மாவட்டத்தில் உள்ள மணகெதி கிராமத்தில் நேற்று அதிகாலை திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையை இரண்டு மயில்கள் கடந்து சென்றுள்ளது. அப்போது அடையாளம் தெரியாத வாகனம் ஒன்றரை வயதுடைய ஒரு ஆண் மற்றும் பெண் மயில்கள் மீது பலமாக மோதியது. இதில் படுகாயமடைந்த 2 மயில்களும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்துவிட்டது.
இதனை பார்த்த பொதுமக்கள் உடனடியாக வனத்துறையினருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். அந்த தகவலின் படி சம்பவ இடத்திற்கு விரைந்து சென்ற வனத்துறையினர் இறந்து கிடந்த இரண்டு மயில்களின் உடல்களையும் பிரேத பரிசோதனை செய்து வனப்பகுதியில் புதைத்துவிட்டனர்.