Categories
உலக செய்திகள்

“பாகிஸ்தானை இம்ரான் கான் தான் காப்பாற்றுவார்….!!” ஆதரவாளர்கள் கோஷம்…!!

பாகிஸ்தானில் பணவீக்கம், விலைவாசி உயர்வு ஆகியவற்றிற்கு அந்நாட்டின் அதிபர் இம்ரான்கான் தான் காரணம் என கூறி எதிர்க்கட்சிகள் அவரது ஆட்சியின் மீது நம்பிக்கை இல்லாத் தீர்மானத்தை நிறைவேற்றின. இந்த தீர்மானதிற்ககாண வாக்கெடுப்பு நாடாளுமன்றத்தில் இன்று நடைபெறவிருந்த நிலையில் அது அரசியல் சாசனத்திற்கு எதிரானது எனக்கூறி சபாநாயகர் காசின் கான் வாக்கெடுப்பை நிறுத்தினார். இதனால் ஆத்திரமடைந்த எதிர்க்கட்சிகள் நாடாளுமன்றத்திற்க்குள்ளேயே உள்ளிருப்புப் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்நிலையில் இம்ரான்கான் நாடாளுமன்றத்திற்கு வராமல் வீட்டில் இருந்தபடியே காணொலி காட்சி வாயிலாக உரையாற்றினார்.

அதோடு பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட வேண்டும் என பாகிஸ்தான் அதிபர் ஆரிப் ஆல்விக்கு கோரிக்கை விடுத்துள்ளார். இதனை அடுத்து இம்ரான்கான் கோரிக்கையை ஏற்று பாகிஸ்தான் நாடாளுமன்றம் கலைக்கப்பட்டது என பாகிஸ்தான் அதிபர் அறிக்கை விடுத்தார். மேலும் 90 நாட்களுக்குள் தேர்தல் நடத்தப்படும் எனவும் அவர் கூறியுள்ளார். இந்நிலையில் இம்ரான் கானின் ஆதரவாளர்கள் நாடாளுமன்றத்திற்கு வெளியே நின்று இம்ரான்கானால் தான் பாகிஸ்தானை காப்பாற்ற முடியும் என கோஷங்கள் எழுப்பி வருகின்றனர்.

Categories

Tech |