Categories
உலக செய்திகள்

போருக்கு மத்தியில் இன்னிசை கச்சேரி….!! உக்ரைன் மக்களுக்கு சிறிய ஆறுதல்…!!

உக்ரைன் நாட்டில் உள்ள ஒடிஸா நகரில் ரஷ்ய படைகள் தொடர் தாக்குதலில் ஈடுபட்டு வருகின்றனர். ஏவுகணை தாக்குதல் காரணமாக அந்த நகரம் முழுவதும் சீர்குலைந்து காணப்படுகிறது. இந்நிலையில் அங்குள்ள அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் நின்றபடி இசைக் கலைஞர்களின் இசை கச்சேரியை நடத்தியுள்ளனர். உக்ரைனின் ஒடிசா நகரில் துறைமுகத்திற்கு அருகே அமைந்துள்ள எண்ணெய் சுத்திகரிப்பு நிலையம் மற்றும் 3 எண்ணெய் கிடங்குகளை ரஷ்ய ராணுவம் வான்வழித் தாக்குதல் நடத்தி அழித்துள்ளது.

போர் மற்றும் அசாதாரணமான இந்த சூழ்நிலையில் மக்களுக்கு உற்சாகமூட்டும் விதமாக அங்குள்ள இசைக்கலைஞர்கள் அடுக்குமாடி குடியிருப்பின் பால்கனியில் நின்றவாறு இன்னிசை கச்சேரி நடத்தி வருகின்றனர். இதனால் அங்கிருந்த மக்கள் சில நிமிடங்களுக்கு பதற்றம் மற்றும் கவலையை மறந்து நடமாடினர்.

Categories

Tech |