Categories
தேசிய செய்திகள்

எக்ஸ்பிரஸ் ரயிலில் திடீரென தடம் புரண்ட 11 ரயில் பெட்டிகள்…. பெரும் பரபரப்பு….!!!!!

மகாராஷ்டிர மாநிலத்தில்  எக்ஸ்பிரஸ் ரயில் திடீரென 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளானது.

மகாராஷ்டிர மாநில லாகவித்,தோவ்லாலி  இடையே எல்டிடி  ஜெய்நகர் பவன்  எக்ஸ்பிரஸ் ரயில் நேற்று காலை சென்று கொண்டிருந்தது. இந்த ரயில் நாக நகர் அருகே வந்து கொண்டிருந்தபோது திடீரென ரயிலின் 11 பெட்டிகள் தடம் புரண்டு விபத்துக்குள்ளாகி இருக்கிறது. தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு மீட்புக் குழுவினர் விரைந்து வந்துள்ளனர்.

இந்த விபத்தில் பயணிகளுக்கு காயம் எதுவும் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் இல்லை. உடனடியாக பயணிகள் அனைவரும் வெளியேற்றப்பட்டு பேருந்தில் அனுப்பிவைக்கப்பட்டனர். ரயில் தடம் புரண்டதால் அந்த வழித்தடங்களில் இயக்கப்படும் மூன்று ரயில்கள் மாற்று வழித்தடங்களில் திருப்பி விடப்பட்டு இருக்கிறது. மேலும் விபத்து குறித்து ரயில்வே நிர்வாகம் விசாரணை மேற்கொண்டு வருகிறது.

Categories

Tech |