Categories
மாநில செய்திகள்

தமிழகத்தில் இன்று மின்தடை…. எந்தெந்த பகுதிகளில்…? வெளியான முக்கிய அறிவிப்பு….!!!!!

தமிழ்நாடு மின்சார வாரியத்தின் பல்வேறு துணை மின் நிலையத்தில் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் உள்பட பல்வேறு பணிகளுக்காக இன்று (4.04-2022) மின் விநியோகம் நிறுத்தம் செய்யப்படுகிறது. பராமரிப்புப் பணி காரணமாக காலை 10.00 மணி முதல் மதியம் 2.00 மணி வரை முக்கிய பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது.

அதன்படி சிவகங்கை மாவட்டம் திருப்புத்தூர் உட்கோட்ட மின் நிலையங்களிலிருந்து மின்னூட்டம் பெரும் உயரழுத்த மின் பாதையில் முக்கிய பராமரிப்பு பணிகள் மேற்கொள்ள இருப்பதால் இன்று திங்கட்கிழமை காலை 10: 00 மணி முதல் பகல் 2: 00 மணி வரை திருப்புத்தூர் மின்நகர், மீன் மார்க்கெட், மதுரை ரோடு, காலேஜ் ரோடு, அஞ்சலக வீதி, நான்கு ரோடு, கணேஷ் நகர் உள்ளிட்ட திருப்புத்தூர் நகர் முழுவதும் மற்றும் கே. வைரவன்பட்டி. தென்கரை,    மண்மேல்பட்டி, தம்பிபட்டி, புதுப்பட்டி, அய்யப்பன் கோயில், சிராவயல், மருதங்குடி, பிள்ளையார்பட்டி, என். வைரவன்பட்டி. மாதவராயன்பட்டி,   திருக்கோஷ்டியூர், கருவேல்குறிச்சி, மடக்கரைபட்டி, ஓலைக்குடிபட்டி, அண்ணா நகர், கோட்டையிருப்பு, சுண்ணாம்பிருப்பு, பிராமணம்பட்டி, மேலயான்பட்டி, குண்டேந்தல்பட்டி, எம். வலையபட்டி, வடவன்பட்டி, கட்டாணிப்பட்டி, மல்லாக்கோட்டை, ஜெயங்கொண்ட நிலை ஆகிய பகுதிகளில் மின் வினியோகம் இருக்காது என திருப்புத்தூர் துணை மின் நிலையத்தின் செயற்பொறியாளர்  தெரிவித்துள்ளார்.

Categories

Tech |