Categories
சினிமா தமிழ் சினிமா

BEAST: 10 ஆண்டுகளுக்கு பின் விஜய்…. ரசிகர்களே மிஸ் பண்ணிடாதீங்க…!!!!

நெல்சன் திலிப்குமார் இயக்கத்தில் நடிகர் விஜய் நடிப்பில் உருவாகியுள்ள ” பீஸ்ட்” திரைப்படம் வரும் 13 ஆம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. பூஜா ஹெக்டே, அபர்ணா தாஸ், செல்வராகவன் என திரையுலக பிரபலங்கள் பலர் இந்த படத்தில் இணைந்து நடித்துள்ளனர். நெல்சன் திலீப்குமார் இந்த திரைப்படத்தை இயக்கியுள்ளார். அனிருத் இசை அமைத்துள்ளார்.

இந்த படத்தின் டிரைலர் நேற்று முன்தினம் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் இணையத்தில் அதிகமாக பகிரப்பட்டு வந்தது. நடிகர் விஜய் பேசும் அதிரடி வசனங்கள் மற்றும் சண்டை காட்சிகள் படத்தின் மீது பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது இந்நிலையில் நடிகர் விஜய் தொலைக்காட்சிக்கு பேட்டி அளித்துள்ளார்.  பத்து ஆண்டுகளுக்குப் பின் நடிகர் விஜய் தொலைக்காட்சியில் பேட்டி அளித்துள்ளார்.

பீஸ்ட் திரைப் படத்தின் பிரமோஷனுக்காக விஜய் அளித்த இந்த பேட்டி ஏப்ரல் 10ஆம் தேதி இரவு 9 மணிக்கு சன் டிவியில் ஒளிபரப்பாகிறது. விஜய் கொடுக்கும் இந்த பேட்டியில் இயக்குனர் நெல்சன் கேள்வி கேட்கிறார். இது வெறும் பேட்டியாக இல்லாமல் சுவாரசியமான உரையாடலாக இருக்கும் என்பதால் விஜய் ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Categories

Tech |