Categories
தேசிய செய்திகள்

மாணவர்களுக்கு வெளியான செம ஹேப்பி நியூஸ்…. தமிழக அரசு வெளியிட்ட சூப்பர் அறிவிப்பு…!!!!!

நீட் தேர்விற்காக மாணவர்களுக்கு ஹைடெக் லேப்  பயிற்சிகள் நடத்தப்பட்டு வருவதாக பள்ளிக் கல்வித் துறை அமைச்சர் கூறியுள்ளார்.

புதுக்கோட்டை மாவட்டம் ஆத்தூரில் நடைபெற்ற திருமண நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக வருகை தந்த தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களிடம் பேசியபோது, இந்த கல்வி ஆண்டில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை கண்டிப்பாக தேர்வுகள் நடைபெறும். ஏற்கனவே அறிவித்தது போல் பத்தாம் வகுப்பு, பதினொன்று, பன்னிரண்டாம் வகுப்பு பொதுத் தேர்வுகள் நடத்தப்படும். மேலும் பள்ளி இறுதியாண்டு தேர்வு ஒன்றாம் வகுப்பில் இருந்து ஒன்பதாம் வகுப்பு வரை நடத்தப்படும்.

மேலும் பாடத்திட்டங்கள் 33 சதவீதத்தில் இருந்து 50 சதவீதமாக குறைக்கப்பட்டு இருப்பதால் குறுகிய காலம் இருந்தாலும் மாணவர்கள்  சிரமமின்றி தேர்வு எழுதலாம். ஆறாம் வகுப்பிலிருந்து ஒன்பதாம் வகுப்பு மாணவர்ககளுக்கு  தேர்வு விரைவில் தொடங்கப்படும். அதற்கான அறிவிப்பு விரைவில் வெளியாகும், எனவும் நீட் தேர்வில் இருந்து விலக்கு அளிப்பதற்காக நமது தமிழக முதல்வர் ஸ்டாலின் மற்றும்  சுகாதாரத் துறை அமைச்சரும் இணைந்து சட்டப்போராட்டம் நடத்தி வருகின்றார்.

அதில் விரைவில் வெற்றி கிடைக்கும். மேலும் ஜூலை 18-ஆம் தேதி நீட்தேர்வு இருக்கும் என அறிவிக்கப்பட்டிருக்கிறது. அதற்காக நமது மாணவர்களுக்குஹைடெக் லேப் பயிற்சிகள் நடத்தப்பட்டு வருகின்றன என அவர் கூறியுள்ளார்.

Categories

Tech |