தமிழகத்தில் திமுக ஆட்சி அமைத்து கிட்டத்தட்ட ஒரு வருடம் ஆகப்போகிறது. ஒரு வருடமாக பல்வேறு நலத்திட்டங்களை திமுக அரசு மக்களுக்காக செயல்படுத்தி வருகிறது. முதல்வர் ஸ்டாலின் அனைத்து துறைகளிலும் அதிரடி மாற்றங்களை ஏற்படுத்தி வருகிறார். அதுமட்டுமல்லாமல் தேர்தல் வாக்குறுதிகள் ஒவ்வொன்றும் நிறைவேற்றப்பட்டு வருகின்றன. இது மக்கள் மத்தியிலும் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ளது.
இந்நிலையில் திமுக அரசு பொறுப்பேற்றதில் இருந்து இதுவரை ரூ.68,375 கோடி மதிப்புள்ள 130 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையெழுத்தாகியுள்ளதாகவும், இதன் மூலம் 2,05,402வேலைவாய்ப்புகள் உருவாகும் என்றும் முதல்வர் ஸ்டாலின் தனது ட்விட்டரில் தெரிவித்துள்ளார். மேலும் முதலீட்டாளர்களின் முதல் முகவரியாக தமிழகத்தை மாற்றி, தமிழக வளர்ச்சிக்கும் இளைஞர்களின் எதிர்காலத்திற்கும் துணை நிற்கும் திமுக அரசின் செயல்பாடுகள் தான் “திராவிட மடல்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.