சித்திரை விஷு பண்டிகைக்காக சபரிமலையில் வருகின்ற 10 ஆம் தேதி நடை திறக்கப்பட உள்ளது.அன்று மாலை கோவில் திறக்கப்பட்டு பக்தர்கள் மறுநாள் அதிகாலை முதல் தான் அனுமதிக்கப்படுவார்கள். தினமும் அங்கு சிறப்பு பூஜைகள் செய்யப்பட்டு 15ஆம் தேதி சித்திரை விஷு வழிபாடுகள் நடைபெறும் எனவும் கூறப்பட்டுள்ளது. முன்பதிவு செய்யும் அனைத்து பக்தர்களுக்கும் தரிசனத்திற்கு அனுமதி கிடைக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக கொரோனா கட்டுப்பாடுகள் அமலில் இருந்ததால் குறிப்பிட்ட அளவிலான பக்தர்கள் மட்டும் அனுமதிக்கப்பட்டு வந்த, தற்போது கட்டுப்பாடுகள் அனைத்தும் தளர்த்தப்பட்டு வழக்கம்போல பக்தர்கள் அனைவரும் அனுமதிக்கப்பட்டு வருகின்றனர்.
Categories