சீனாவின் முக்கிய நகரங்களில் கொரோன வைரஸ் காய்ச்சல் வேகமாக பரவி வருவதால் பொதுமக்கள் மத்தியில் அச்சம் நிலவி வருகிறது. சீன தலைநகரம் பெல்ஜியம் மற்றும் வர்த்தக நகரமான ஷாங்காய் உள்ளிட்ட இடங்களில் கொரோனோ வைரஸ் தீவிரமடைந்து வருகிறது. இதுவரை இந்த நோயால் 4 பேர் உயிரிழந்து விட்டனர்.
மேலும் சுமார் 300 பேர் கொரோனா வைரஸால் பாதிக்கப்பட்டுள்ளனர். இந்நிலையில் இந்தியாவிலும் கொரோனோ வைரஸ் காய்ச்சல் பரவும் ஆபத்து உள்ளததால், கண்காணிப்பு கேமரா தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க சீனாவில் இருந்து இந்தியாவிற்கு வரும் பயணிகள் தீவிர மருத்துவ பரிசோதனைக்கு பின்னரே அனுமதிக்கப்படுகின்றனர்.
தமிழகத்திலும் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. காய்ச்சல்,சளி, இருமல் சுவாசக்கோளாறு உள்ளிட்ட அறிகுறிகள் ஏற்பட்டால், பொதுமக்கள் மருத்துவ பரிசோதனை மேற்கொள்ள வலியுறுத்தப்பட்டுள்ளது.