உக்ரைன் தலைநகர் கீவ்வில் 410 பொதுமக்களின் உடல்கள் கண்டெடுப்பு.
உக்ரைன் மீது ரஷ்யா 38வது நாளாக தனது தாக்குதலை நடத்தி வருகிறது. இந்த நிலையில் உக்ரைன் தலைநகர் கீவ்வில் 410 பொது மக்களின் உடல்கள் கண்டு எடுக்கப்பட்டுள்ளதாகவும், ரஷ்யா போர்க்குற்றத்தில் ஈடுபடுவதாகவும் மேற்கத்திய நாடுகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
இதற்கிடையில் ரஷ்யா உக்ரைன் மீது தனது தாக்குதலை தொடங்கியது முதல் 42 லட்சம் பேர் அந்நாட்டை விட்டு வெளியேறி உள்ளதாகவும், சுமார் 20 ஆயிரத்திற்கும் அதிகமானோர் போரில் உயிரிழந்துள்ளதாகவும் ஐநா அதிகாரிகள் அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ரஷ்ய வீரர்கள் கீவ், கார்கிவ், செர்னிகிவ் நகரங்களில் பாலியல் வன்கொடுமை, கொலை போன்ற பொதுமக்களுக்கு எதிரான போர்க்குற்றங்களை செய்திருக்கலாம் என குற்றம் சாட்டியுள்ளனர்.